புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

ஜாவாஸ்க்ரிப்ட்

உயிர்மை இதழும், தமிழுக்கான ரெகுலர் எக்ஸ்ப்ரஷனும்

மனுஷ்யபுத்திரன் நடத்தும் உயிர்மை இதழை இணையத்திலும் படிக்க முடியும் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். இதைப் படிப்பதற்கு அத்தளத்தில் உறுப்பினராகப் பதிந்துகொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இத்தளம் .நெட் தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் ஒரு சிறு குறை, விண்ணப்பப்படிவத்தில் நம் பெயரைத் தமிழில் கொடுக்க முடியாது. ஆங்கிலத்தில்தான் கொடுக்க முடியும். டாட்நெட்டின் உள்ளமைந்த வேலிடேஷன் கண்ட்ரோல்களைக் கொண்டே பயனர் கொடுக்கும் விவரங்களைச் சரிபார்க்குமாறு அமைத்திருக்கிறார்கள்.  அவ்வகையில், பெயரைச் சரிபார்க்க, ரெகுலர் எக்ஸ்ப்ரஷன் கண்ட்ரோலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எனினும் இந்த கண்ட்ரோலின் வேலிடேஷன் எக்ஸ்ப்ரஷனாக ^[a-z A-Z]+$ என்று கொடுத்துள்ளார்கள். இதனால், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வெற்றிடத்தைத் தவிர வேறு எந்த ஒரு எழுத்தையும் பெயரை உள்வாங்கிக்கொள்ளும் டெக்ஸ்ட்பாக்ஸ் அனுமதிக்காது. எனவே, இந்த ரெகுலர் எக்ஸ்ப்ரஷனில் இத்தள நிர்வாகிகள் ஒரு சிறு மாறுதல் செய்தால் இப்பிரச்சனை சரியாகிவிடும். ^[a-z A-Z]+$ என்று இருக்கும் எக்ஸ்ப்ரஷனை, ^[a-z A-Z ஃ-ௗ]+$ என்று மாற்றிவிட்டால் போதும்,...

posted @ Thursday, August 21, 2008 1:45 AM | Feedback (2) | Filed Under [ ஜாவாஸ்க்ரிப்ட் ஏஎஸ்பி.நெட் ]

டெக்ஸ்ட் ஏரியாவின் அதிகபட்ச அளவை வரையறுக்க...

சாதாரண டெக்ஸ்ட்பாக்சில் இத்தனை இத்தனை எழுத்துக்களுக்குமேல் உள்ளீடு செய்யக்கூடாது என்பதை MaxLength பண்பைக் கொண்டு சுலபமாக வரையறுத்து விடலாம். ஆனால் டெக்ஸ்ட் ஏரியாவில் இது சாத்தியமில்லை. எனவேதான் asp:TextBox கண்ட்ரோலில் TextMode=MultiLine என்று கொடுத்துவிட்டு, MaxLength ப்ராப்பர்ட்டியில் எவ்வளவு அளவு கொடுத்தாலும் ப்ரௌசரில் பார்க்கும் பொழுது அது எடுபடுவதில்லை. எனினும் சில நேரங்களில் டெக்ஸ்ட் ஏரியாவினுள் தரப்படும் தகவல்களையும் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுக்கொள்ள முடியாதவாறு வரையறுப்பது தேவையாகிறது. இதற்கு ASP.NET என்று இல்லாமல் இதர தொழில்நுட்பங்களிலும் பின்பற்றப்படும் ஒரு முறை, படிவத்தை (ஃபார்ம்) சப்மிட் செய்தவுடன் onsubmit ஈவெண்ட்டில் குறிப்பிட்ட டெக்ஸ்ட் ஏரியாவின் அளவைப் பரிசோதித்து, ஃபார்ம் சப்மிட் ஆவதைத் தடுப்பதுதான். இப்படி தடுத்தவுடன் பயனருக்கு ஒரு அலர்ட் பாக்ஸ் வழியாக தகவலின் அளவைக் குறைக்கச்சொல்லி அறிவிக்கலாம். ஆனால் நிறைய டெக்ஸ்ட் ஏரியா இருக்கும் ஒரு இணையப்படிவத்தில் இந்த வழி சற்று கடினமானது. இதற்கான தீர்வு, ஏஎஸ்பி.நெட்டில் உள்ள வேலிடேஷன் கண்ட்ரோலில்...

posted @ Tuesday, January 29, 2008 8:59 AM | Feedback (3) | Filed Under [ ஜாவாஸ்க்ரிப்ட் ஏஎஸ்பி.நெட் ]

மற்றுமொரு ஜாவாஸ்க்ரிப்ட் ஃப்ரேம்வொர்க்

சி#, பைத்தான், விபி.நெட் ஆகியவற்றுக்குப் புள்ளிவலையைப் போலவே, ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கும் பல சட்டகாங்கள் (ஃப்ரேம்வொர்க்) இருக்கின்றன. ஜாவாஸ்க்ரிப்ட் என்பதை விட ஜாவாஸ்க்ரிப்ட்+ஸ்டைல்ஷீட் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இதில் வடிவமைப்பு, அழகு அடிப்படையில் யாஹுவின் YUIயும், ஆற்றலுக்குjQueryயும், இவை இரண்டுக்கும் சேர்த்து dojoவும் சேர்ந்து விளங்குகின்றன. ஒரு சாதாரண இணையப்பயன்பாட்டைக்கூட எங்கேயோ சிவாஜி, பில்லா அளவிற்கு தூக்கி நிறுத்தும் அற்புதமான விஷயம் இப்படிப்பட்ட ஜாவாஸ்க்ரிப்ட் ஃப்ரேம்வொர்க். இதை எல்லாம் விட, மைக்ரோசாஃப்டே தரும் ASP.NET Ajax 1.0வும் இருக்கவே இருக்கிறது. இவை எல்லாவற்றிலுமே உள்ள ஒரு சிறப்பான விஷயம், எல்லா இணாய உலாவிகளிலுமே ஒரே மாதிரி நன்றாக இயங்கும் என்பதுதான். அதற்காக லின்க்சில் இயங்குமா என்றெல்லாம் கேட்க்ககூடாது. ஆனால் இன்று காலையில் நான் பார்த்த ExtJS எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும் போலிருக்கிறது. ExtJS உதாரணப்பகுதியில் "இணைய டெஸ்க்டாப்" என்று ஒரு மாதிரிப் பக்கம் இருக்கிறதே, அப்ப்ப்ப்ப்ப்பா!!!! கொன்னுட்டாங்க!  ஒக்காந்து யோசிப்பாய்ங்ஙளோ?

posted @ Monday, January 14, 2008 10:51 PM | Feedback (6) | Filed Under [ ஜாவாஸ்க்ரிப்ட் ]

Powered by: