புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

சுருங்கிய கோப்பு, நெருங்காத டேட்டாபேஸ், நொறுங்கிய இதயம்...

ஒரு கணிப்பொறியில் உள்ள டேட்டாபேசை மற்றொரு கணிப்பொறிக்கு மாற்ற/பிரதி எடுக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று டேட்டாபேசின் mdb மற்றும் log கோப்புக்களை நேரடியாக இரண்டாவது கணினியில் உள்ள எஸ்க்யூஎல் சர்வருக்கு இணைப்பது. இதை மேனேஜ்மெண்ட் ஸ்டூடியோ துணைகொண்டு இடைமுகப்பு வழியாகவோ, அல்லது கீழ்க்காணும் வினவற்தொகுப்பின் உதவியுடனோ செய்யலாம்:

CREATE DATABASE [thendral] ON
( FILENAME = N'drive:\path\dbname_Data.MDF' ),
(
FILENAME = N'drive:\path\dbname_Log.LDF' )
FOR
ATTACH
GO

if not exists (select name from master.sys.databases where name = N'dbname' and SUSER_SNAME(sd.owner_sid) = SUSER_SNAME() ) EXEC [dbname].dbo.sp_changedbowner @loginame=N'machinename\adminuser', @map=false

 

இவ்வாறு செய்யும் பொழுது, சில சமயம் டேட்டாபேசை இணைக்க முடியாமல் கீழ்க்கண்ட பிழைச்செய்தி வரக்கூடும்:

Msg 5118, Level 16, State 1, Line 1
The file "drive\path\dbname_Data.MDF" is compressed but does not reside in a read-only database or filegroup. The file must be decompressed.

எந்த விதமான கம்ப்ரஷனும் செய்யாமல் அப்படியேதானே முதல் கணிப்பொறியிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம், இது என்னடா இது ரோதனை என்று முதலில் படுத்தும். உண்மையில் சுருங்கிக்கிடப்பது இந்த டேட்டாபேஸ் கோப்புகள் இருக்கும் வன்தகடுதானேயொழிய இந்த கோப்புகளே சுருங்கிவிடவில்லை.

 

இந்த ப்ரச்சனையை சரி செய்ய, குறிப்பிட்ட ட்ரைவை decompress செய்தாலே போதும், எல்லாம் சுபமாக முடியும்.

Decompress Drive

இதைச்செய்ய, ட்ரைவின் மேல் right click செய்து, ப்ராப்பர்டீஸ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு வரும் ப்ராப்பர்ட்டி பெட்டியில், Compress drive to save disk spaceஐ uncheck செய்து, OKவை க்ளிக் பண்ண வேண்டும்.

 

 

அந்த ட்ரைவின் அளவையும் அதிலுள்ள கோப்புக்களின் எண்ணிக்கையையும் பொறுத்து, இந்த செயல் முழுமையடைய சிறிது நேரமாகலாம். இதன் பிறகு mdf கோப்பை அட்டாச் செய்தால் இந்த பிழைச்செய்தி வராமல் சமர்த்தாக இரண்டாம் கணினியில் டேட்டாபேஸ் உருவாகிவிடும்.

Print | posted on Wednesday, July 23, 2008 11:35 PM | Filed Under [ தகவல் தளம் ]

Feedback

No comments posted yet.

Post Comment

Title  
Name  
Email
Url
Comment   
Please add 5 and 4 and type the answer here:

Powered by: