புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

எஸ்க்யூஎல் சர்வர் timeout ஆகிறதா?

செந்தில்: அண்ணே, எனக்கு ஒரு சந்தேகம்ணே...

கௌண்டமணி: டெக்னிக்கலா எதாவது சந்தேகம்னா, கேளு. வேற ஏதாவது கோக்கு மாக்கா கேட்ட, அப்பறம் தலையயும் ஓம்மூஞ்சி மாதிரி மாத்திடுவேண்டா client feedback தலையா...

செந்தில்: அதில்லண்ணே... ASP.NETல இந்த timeout error எரர், timeout எரர்ன்னு ஒன்னு வருதே, அத எப்படின்னே சரி பண்றது?

கௌண்டமணி: அடேய் க்ளைன்ட் வாயா... இப்படி பொத்தாம்பொதுவா user மாதிரி எரர் ரிப்போர்ட் பண்ணினா எப்படிடா புரியும்? என்ன எரர்ன்னு முழுசா சொல்லுடா...

செந்தில்: Timeout expired.  The timeout period elapsed prior to completion of the operation or the server is not responding.

டி. ராஜேந்தர்: யம்மா தங்கச்சி, எர்ரர் உருவாச்சி. வீட்டுக்கு நேரமாச்சி, வயிறும் தடுத்தாச்சி.

ஒனக்கு நெனவிருக்காம்மா... சின்ன வயசுல எஸ்க்யூஎல் சர்வரோட கனெக்ட் பண்ணி வெளயாடும்போது,  டைம் ஔட் எர்ரர் வருது டைம் ஔட் எர்ரர் வருதுன்னு நீ சொல்லுவ, டைம் ஔட் value அதிகமாக்குன்னு நான் சொல்லுவேன். கொஞ்ச நால் நான் வேலை கிடைக்காம திண்டாடினப்ப, நீ எனக்கு டைம் ஔட்டுன்னு சொல்லி கிண்டல் பண்ணுவ.

கனக்ஷன் ஸ்ட்ரிங்குல Connect Timeoutடா
கமான்ட்டு ஆப்ஜக்டுல commandtimeoutடா
ரெண்டுத்துக்கும் வித்யாசம் பெயருலயே இருக்குடா
டண்டனக்கா ஏ டணக்கணக்கா டண்டனக்கா ஏ டணக்கணக்கா

விஜயகாந்த்: டேய், நிறுத்துடா... டெவலப்மென்ட்டுல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை....  எர்ரர்.  SQLCommand objectல எத்தன ப்ராப்பர்ட்டி இருக்குன்னு தெரியுமா ஒனக்கு? 1 ஸ்ட்ரிங்க் ப்ராப்பர்ட்டி இருக்கு, 23 மெத்தட்ஸ் இருக்கு, 1 பூலியன் ப்ராப்பர்ட்டி இருக்கு, 1 இன்ட் ப்ராப்பர்ட்டி இருக்கு.  கனக்ஷன் ஸ்ட்ரிங்குல எத்தனை ஆட்ரிப்யூட் இருக்குன்னு தெரியுமா ஒனக்...

வடிவேலு: ஆஹா... ஆரம்பிச்சுட்டாய்ங்க்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்ஞ... நெறய டேட்டாவ ப்ராசஸ் பண்ணும் போது இப்படி ஒரு எரர் வந்தா என்ன பண்ணனும்னுதானடா இவன் கேட்டான்... அதுக்குப் போய் ஆளாளுக்கு இப்படி கொல்றீங்களேடா...

பார்த்திபன்ஆளை ஆளுக்கு கொல்லும் போது எதுக்கு நீ டேட்டாவை ப்ராசஸ் பண்ற? டேய், தீவிரவாதியா நீ?

வடிவேலு: ஆஹா, அவனா நீயீ? இதோ பாருப்பா... ஒனக்கு பதில் தெரிஞ்சா சொல்லு. இல்ல ஆள விடு, நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கேன்.

பார்த்திபன்: பதில் சொல்லாட்டி ஆள விடணுமா இல்ல பதில் தெரியாட்டி ஆள விடணுமா?

வடிவேலு: எனக்கு டைம் ஆச்சு. நான் ஆபீஸ் போய் தூங்கணும். நான் வரேம்பா.

பார்த்திபன்: எஸ்க்யூஎல் சர்வரோட தொடர்பை ஏற்படுத்தறதுக்கு Connect Timeout  ஆட்ரிப்யூட்டை கனெக்ஷன் ஸ்ட்ரிங்க்ல குடுக்கணும். எவ்வளவு நேரம் வரை தொடர்பு ஏற்படுத்த காத்திருந்து அப்பறம் எரர் மெசேஜை அனுப்பலாம்னு சொல்றதுக்குதான் இந்த Connect Timeout. அதுக்கும் இந்த timeout expiredக்கும் சம்பந்தம் இல்லை.  இதுக்கு டேட்டா அடாப்டரோட SelectCommandலயோ அல்லது SqlCommand ஆப்ஜக்ட்லயோ இருக்கற CommandTimeout ப்ராப்பார்ட்டீலதான்...

வடிவேலு: டைம் செட் பண்ணணுமா?

பார்த்திபன்: என்ன, ஆபீஸ்ல போய் தூங்கறதுக்குதான் டைம் செட் பண்ணப்போறியா?

வடிவேலு: சேச்சே, அதெல்லாம் இல்லப்பா...

பார்த்திபன்: ஓ, அப்போ ஒனக்கு ஆபீசே இல்லயா? வேல இல்லாம சும்மா வெட்டியாதான் சுத்தறயா?

வடிவேலு: இருப்பா இருப்பா... அது ஒனக்கு எப்படி தெரியும்?

பார்த்திபன்: இதுதான், போட்டு... வாங்கறது.

Print | posted on Friday, June 13, 2008 2:27 AM | Filed Under [ தகவல் தளம் ஏஎஸ்பி.நெட் ]

Feedback

Gravatar

# re: எஸ்க்யூஎல் சர்வர் timeout ஆகிறதா?

எலேய் போன் பன்னுலே உன் போன் நம்பர் தொலைஞ்சுப் போச்சுலே. அட்லீஸ்ட் ஒரு ஸ்ம்ஸ் பண்ணுலே.
7/1/2008 12:26 PM | iyappan

Post Comment

Title  
Name  
Email
Url
Comment   
Please add 1 and 1 and type the answer here:

Powered by: