புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

எக்சல் கோப்பைப் டாட்நெட்டில் பயன்படுத்தினால் தகவல் இழப்பு ஏற்படுகிறதா?

எக்சல் கோப்புகளை எக்சல் ஆப்ஜக்ட் பயன்படுத்தாமலேயே வெறும் OleDbConnectionனை மட்டும் வைத்துக்கொண்டே டாட்நெட் தொழில்நுட்பம் பயன்படுத்த முடியும், கீழ்க்கண்டவாறு:

OleDbConnection xlConn = new OleDbConnection(@"Provider=Microsoft.Jet.OLEDB.4.0;Data Source=d:\filename.xls;Extended Properties='Excel 8.0;'");

இதிலுள்ள ஒவ்வொரு சீட்டையும் ஒரு டேபிலாகப் படிக்கலாம்.

பிறகு டேபிளில் உள்ள வரிசைகளைப் படிக்க "select * from [sheet1$]" என்று அடாப்டரிலோ அல்லது கமாண்ட் ஆப்ஜக்டிலோ வினவளைக் கொடுக்கவேண்டியதுதான். இதில் ஒரு சிறிய பிரச்சனை என்னவென்றால் டேட்டாடைப்பை OleDbConnection புரிந்துகொள்ளும் விதம்தான். உதாரணமாக, எண்கள் மட்டும் இருக்கவேண்டிய ஒரு காலத்தில் (column) ஒரு எழுத்துச்சரத் தகவல் இருந்தது என்றால் அந்த தகவலை எடுத்துக்கொள்ளாமல் வெறும் null என்று அந்த இடத்தில் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்க, தகவல்தொடர்ப்புச் சரத்தில், IMEX=1 என்று சேர்த்துத் தரவேண்டும், கீழ்க்கண்டவாறு:

OleDbConnection xlConn = new OleDbConnection(@"Provider=Microsoft.Jet.OLEDB.4.0;Data Source=d:\filename.xls;Extended Properties='Excel 8.0;IMEX=1'");

Print | posted on Thursday, April 03, 2008 12:56 PM | Filed Under [ தகவல் தளம் C# கட்டுமானம் ஏஎஸ்பி.நெட் ]

Feedback

Gravatar

# re: எக்சல் கோப்பைப் டாட்நெட்டில் பயன்படுத்தினால் தகவல் இழப்பு ஏற்படுகிறதா?

படித்து வைத்துக்கொண்டேன்.எப்ப உபயோகிப்பேன் என்று எனக்கே தெரியாது.
Gravatar

# re: எக்சல் கோப்பைப் டாட்நெட்டில் பயன்படுத்தினால் தகவல் இழப்பு ஏற்படுகிறதா?

Excell checks first 9 rows to determin the data type if first 9 rows no value then it removes that column. u have to specify IMEX=1..

you have done good job.. lot informative
6/13/2008 3:27 AM | aravindaan
Gravatar

# re: எக்சல் கோப்பைப் டாட்நெட்டில் பயன்படுத்தினால் தகவல் இழப்பு ஏற்படுகிறதா?

நன்றி அரவிந்தன். Did you mean to say "if first 9 rows have no value, then it removes that value", or the actual column itself?

Post Comment

Title  
Name  
Email
Url
Comment   
Please add 1 and 8 and type the answer here:

Powered by: