எக்சல் கோப்புகளை எக்சல் ஆப்ஜக்ட் பயன்படுத்தாமலேயே வெறும் OleDbConnectionனை மட்டும் வைத்துக்கொண்டே டாட்நெட் தொழில்நுட்பம் பயன்படுத்த முடியும், கீழ்க்கண்டவாறு:
OleDbConnection xlConn = new OleDbConnection(@"Provider=Microsoft.Jet.OLEDB.4.0;Data Source=d:\filename.xls;Extended Properties='Excel 8.0;'");
இதிலுள்ள ஒவ்வொரு சீட்டையும் ஒரு டேபிலாகப் படிக்கலாம்.
பிறகு டேபிளில் உள்ள வரிசைகளைப் படிக்க "select * from [sheet1$]" என்று அடாப்டரிலோ அல்லது கமாண்ட் ஆப்ஜக்டிலோ வினவளைக் கொடுக்கவேண்டியதுதான். இதில் ஒரு சிறிய பிரச்சனை என்னவென்றால் டேட்டாடைப்பை OleDbConnection புரிந்துகொள்ளும் விதம்தான். உதாரணமாக, எண்கள் மட்டும் இருக்கவேண்டிய ஒரு காலத்தில் (column) ஒரு எழுத்துச்சரத் தகவல் இருந்தது என்றால் அந்த தகவலை எடுத்துக்கொள்ளாமல் வெறும் null என்று அந்த இடத்தில் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்க, தகவல்தொடர்ப்புச் சரத்தில், IMEX=1 என்று சேர்த்துத் தரவேண்டும், கீழ்க்கண்டவாறு:
OleDbConnection xlConn = new OleDbConnection(@"Provider=Microsoft.Jet.OLEDB.4.0;Data Source=d:\filename.xls;Extended Properties='Excel 8.0;IMEX=1'");