நிறுவனங்களின் இருப்பு அறிக்கை, லாப நஷ்டக்கணக்கு அறிக்கை போன்றவற்றில் நஷ்டத்தொகை பெரும்பாலும் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நிறுவனத்தின் வரவு/செலவு போன்ற விவரங்கள் தகவல் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். C#ல் துணையுடன் இத்தகைய வரவுகளில் இருந்து கழிக்கப்பட்ட செலவுத்தொகையை லாபமாகவோ நஷ்டமாகவோ அறிக்கையாகக் காண்பிக்கலாம். வரவை விட செலவு கம்மியாக இருந்தால் லாபம். செலவு வரவை விட அதிகம் இருந்தால் நஷ்டம். இந்த நிலையில்,
வரவு-செலவு = தொகை
இந்த தொகை negative எண்ணாக இருந்தால் நஷ்டம். இந்த தொகையை, - குறி நீக்கி அடைப்புக்குறிக்குள் காண்பிக்கவேண்டும்.
100 - 140 = -40 என்பதை, -40 என்று காண்பிக்காமல், (40) என்று அறிக்கையில் காண்பிக்கவேண்டும். ஒன்றிரண்டு லாப/நஷ்டத்தை மட்டுமே காண்பிக்க வேண்டும் என்றால், if/else போட்டு பாசிடிவ்/நெகடிவ் எண்களைப் பொருத்து அப்படியேவோ அல்லது ஒரு அடைப்புக்குறி போட்டோ காண்பித்து விடலாம். ஆனால் மிக அதிக அளவிலான இது போன்ற எண்களைக் காண்பிக்க வேண்டும் என்றால், String.Format என்ற ஃபங்க்ஷனைப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு உதாரணம்:
String.Format("
{0:0;(0);''}", தொகை)
மேற்குறிப்பிட்ட உதாரணமானது, மூன்று விதமான முடிவுகளை ஆராய்ந்து அதற்கேற்றவாறு ஒரு formatted stringஐத் தருகிறது. அதாவது, ஒரு எண் பாசிடிவ் எண்ணாக இருந்தால் அந்த எண்ணை எப்படியேவும், நெகடிவ் எண்ணாக இருந்தால் அதனை ஒரு அடைப்புக்குறிக்குள் - குறியை நீக்கிவிட்டும், வெறும் பூஜ்யமாக இருந்தால் ஒரு வெற்றுச்சரத்தையும் தருகிறது.
இந்த முறை வேறு சில சுற்றுவழி முறைகளைவிட வேகமானதாக இருக்கும்.