சி#, பைத்தான், விபி.நெட் ஆகியவற்றுக்குப் புள்ளிவலையைப் போலவே, ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கும் பல சட்டகாங்கள் (ஃப்ரேம்வொர்க்) இருக்கின்றன. ஜாவாஸ்க்ரிப்ட் என்பதை விட ஜாவாஸ்க்ரிப்ட்+ஸ்டைல்ஷீட் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இதில் வடிவமைப்பு, அழகு அடிப்படையில் யாஹுவின்
YUIயும், ஆற்றலுக்கு
jQueryயும், இவை இரண்டுக்கும் சேர்த்து
dojoவும் சேர்ந்து விளங்குகின்றன. ஒரு சாதாரண இணையப்பயன்பாட்டைக்கூட எங்கேயோ சிவாஜி, பில்லா அளவிற்கு தூக்கி நிறுத்தும் அற்புதமான விஷயம்
இப்படிப்பட்ட ஜாவாஸ்க்ரிப்ட் ஃப்ரேம்வொர்க். இதை எல்லாம் விட, மைக்ரோசாஃப்டே தரும் ASP.NET Ajax 1.0வும் இருக்கவே இருக்கிறது. இவை எல்லாவற்றிலுமே உள்ள ஒரு சிறப்பான விஷயம், எல்லா இணாய உலாவிகளிலுமே ஒரே மாதிரி நன்றாக இயங்கும் என்பதுதான். அதற்காக
லின்க்சில் இயங்குமா என்றெல்லாம் கேட்க்ககூடாது.
ஆனால் இன்று காலையில் நான் பார்த்த
ExtJS எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும் போலிருக்கிறது. ExtJS உதாரணப்பகுதியில் "
இணைய டெஸ்க்டாப்" என்று ஒரு மாதிரிப் பக்கம் இருக்கிறதே, அப்ப்ப்ப்ப்ப்பா!!!! கொன்னுட்டாங்க! ஒக்காந்து யோசிப்பாய்ங்ஙளோ?