விஷுவல் ஸ்டூடியோ 2005வில் ASP.NET தொழில்நுட்பத்தில் நிரலெழுத, ஐ.ஐ.எஸ். இல்லாவிட்டாலும் கூட ASP.NET Development Web Serverஐப் பயன்படுத்தியே முழு ப்ராஜக்டையும் முடித்துவிடலாம். IIS டீஃபால்ட்டாக 80வது துளையில்(port) இயங்கும். ஆனால் ASP.NET டெவலப்மெண்ட் வெப் சர்வர் ஒவ்வொரு முறையும் தானாகவே ஒரு துளை எண்ணை எடுத்துக்கொள்ளும். உதாரணமாக சொல்யூஷன் எக்ஸ்ப்ளோரரில் ஒரு ப்ராஜக்ட்:
இதில் துளை எண் 1116 என்று இருக்கிறது. அதுவும் மாற்ற முடியாததாக disable ஆகி இருக்கிறது. இந்த ப்ராஜட்டைலுள்ள பக்கங்களைக் காண, http://localhost:1116/historyresearchdb என்ற முகவரியில் ப்ரௌசரில் (உலாவி) பார்க்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறை ப்ராஜக்டைத் திறக்கும் பொழுதும் ஒவ்வொரு துளை எண்ணை எடுத்துக்கொள்ளும். இதனால் நம்முடைய உலாவியில் இந்த ப்ராஜக்ட்டுக்கான புத்தகக்குறி வைத்துக்கொள்வதோ, அல்லது வெப்சர்வீஸ் ப்ராஜக்ட்டாக இருந்தால் வெப்சர்வீசுக்கான நிரந்தர URL வைத்துக்கொள்வதோ இயலாததாகிவிடும். ஏனெனில், துளை எண் மாறுவதால், முகவரியும் ஒவ்வொரு முறையும் வேறுபடும். எனினும், ஒரே போர்ட் நம்பரை நிரந்தரமாக இருக்கச்செய்யவும் முடியும். அதற்கு Use Dynamic Port என்ற ப்ராப்பர்டியின் மதிப்பை True என்று மாற்றிவிட்டால் போதும். உதாரணமாக,
மேற்கண்ட திரைக்காட்சியில் இருப்பது மாதிரி, True என்று மாற்றிவிட்ட பிறகு, ஒவ்வொரு முறையும் இந்த ப்ராஜக்ட்டின் போர்ட் 1116 என்றேதான் இருக்கும். மேலும், True என்று மாற்றியவுடன் இந்த port எண்ணை மாற்றவும் முடியும். எனவே, இதை 80 என்றும் மாற்றிக்கொள்ளலாம். இதனால், வெறும் http://localhost/historyresearchdb என்றே இனிமேல் கொடுத்தாலும் கூடப் போதும். http://localhost:80/historyresearchdb என்று கொடுப்பதும் அவசியம் இல்லை. ப்ரௌசர் பொதுவாக http வினவலை சரிவரின் 80ஆம் துளையில்தான் கேட்கும்.