விஷுவல் ஸ்டூடியோ 2005வில் ASP.NET தொழில்நுட்பத்தில் நிரலெழுத, ஐ.ஐ.எஸ். இல்லாவிட்டாலும் கூட ASP.NET Development Web Serverஐப் பயன்படுத்தியே முழு ப்ராஜக்டையும் முடித்துவிடலாம். IIS டீஃபால்ட்டாக 80வது துளையில்(port) இயங்கும். ஆனால் ASP.NET டெவலப்மெண்ட் வெப் சர்வர் ஒவ்வொரு முறையும் தானாகவே ஒரு துளை எண்ணை எடுத்துக்கொள்ளும். உதாரணமாக சொல்யூஷன் எக்ஸ்ப்ளோரரில் ஒரு ப்ராஜக்ட்:
இதில் துளை எண் 1116 என்று இருக்கிறது. அதுவும் மாற்ற முடியாததாக disable ஆகி இருக்கிறது. இந்த ப்ராஜட்டைலுள்ள பக்கங்களைக் காண, http://localhost:1116/historyresearchdb என்ற முகவரியில் ப்ரௌசரில் (உலாவி) பார்க்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறை ப்ராஜக்டைத் திறக்கும் பொழுதும் ஒவ்வொரு துளை எண்ணை எடுத்துக்கொள்ளும். இதனால் நம்முடைய உலாவியில் இந்த ப்ராஜக்ட்டுக்கான புத்தகக்குறி வைத்துக்கொள்வதோ, அல்லது வெப்சர்வீஸ் ப்ராஜக்ட்டாக இருந்தால் வெப்சர்வீசுக்கான நிரந்தர URL வைத்துக்கொள்வதோ இயலாததாகிவிடும். ஏனெனில், துளை எண் மாறுவதால், முகவரியும் ஒவ்வொரு முறையும் வேறுபடும். எனினும், ஒரே போர்ட் நம்பரை நிரந்தரமாக...
one-to-many relationship என்பதை மொழி பெயர்த்ததால் இப்படி ஒரு சொதப்பலான தலைப்பு அமைந்து விட்டதென்றாலும், இவ்வகையில் அமைந்த தகவல்தளம் மிகவும் பயனுள்ளது என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
வேறு டேபிலில் உள்ள பல வரிசைகளுடன் தொடர்பில் இருக்கும் ஒரு தகவல் வரிசையை, டேட்டாக்ரிட் கண்ட்ரோலின் துணை கொண்டு காண்பிப்பது மிகவும் சுலபம். ஒரு எடுத்துக்காட்டிற்கு, subtext என்ற திறமூல மென்பொருள் கொண்டு இயங்கும் இந்த வலைப்பூவிற்கான தகவல் தள அமைப்பில் இருந்து இரண்டு டேபிள்களை எடுத்துக்கொள்வோம்.
Subtext_Config
BlogId
UserName
...