புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

July 2007 Entries

ரெய்ல்ஸ் என்றால் என்ன?

ஒரு வலைத்தள அடிப்படையிலான மென்பொருளை வடிவமைக்க, ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு ஒவ்வொரு வரியாக நிரல் எழுதி முடிப்பதை விட ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஒரு திட்டப்படி ஆரம்பித்து எழுதி முடிப்பது சுலபமாக இருக்கும். ஒரு மென்பொருளில் தேவைப்படும் குறிப்பிட்ட அம்சம், ஏற்கனவே எழுதிய மென்பொருளிலும் இருந்திருக்கலாம். அல்லது வேறு யாரோ எழுதிய மென்பொருளில் இருந்திருக்கலாம். அதே போல வடிவமைப்பிலும் அனைத்து மென்பொருட்களுக்கும் பொதுவான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியும். இப்படி அடிக்கடி தேவைப்படும் அம்சங்களுக்கு மறுபடி மறுபடி நிரல் வரிகள் எழுதுவதையும், பொதுவான கட்டமைப்புக்கு மீண்டும் மீண்டும் திட்டமிடுவதையும் தவிர்க்க, framework என்ற ஒன்றைப் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட ஃப்ரேம்வொர்க்கில், நிறைய விதமான கட்டுமான வகைகள் இருக்கின்றன. கட்டுமான வகை (architectural pattern) என்பது பயனருக்கு எதைக் காண்பிக்கிறோம், எப்படி காண்பிக்கிறோம், மற்றும் எப்படி பரிமாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைச் சார்ந்ததாகும். இதில் தற்பொழுது மிகவும் ப்ரபலமாக இருப்பது MVC எனப்படும் மாடல்-வ்யூ-கண்ட்ரோலர் என்ற கட்டுமான வகை....

posted @ Saturday, July 28, 2007 1:08 PM | Feedback (6) | Filed Under [ கட்டுமானம் ]

Powered by: