புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

May 2007 Entries

char, varchar-என்ன வேறுபாடு?

எஸ்க்யூஎல் சர்வரில் char, varchar என்று இரண்டு வெவ்வேறு மாறிலி வகைகள், ஒரே நோக்கத்திற்காக இருக்கின்றன. ஆரம்பக்கால தகவல்தள வடிவமைப்பாளருக்கு இவ்விரண்டில் சிறிய எழுத்துச் சரங்களை(small strings)த் தேக்கி வைக்க எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சில நேரங்களில் குழப்பம் வரலாம். பெரும்பாலும் varcharதான் தேர்ந்தெடுக்கப் படுகிறது. ஒப்பீட்டளவில், varcharன் பொருளான "மாற்றி அமைத்துக்கொள்ளும் மாறிலி வகை" (variable character) என்ற பண்பின் ஈர்ப்பு இதற்குக் காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. தத்தமது தகவலைச் சேமிக்கும் முறை மற்றும் வினவலுக்குத் தகவலைத் திரட்டி வழங்கும் முறைகளால் char மற்றும் varchar மாறிலிகள் வேறுபடுகின்றன. இவற்றுக்கு இடையேயான அடிப்படை வேற்றுமை என்று பார்த்தால், மிகவும் பிரசித்தமான, சரங்களைப் பதியும் விதம் எனலாம். அதாவது, char வகையில் தேக்கி வைக்கப்படும் தகவலானது, அந்த fieldன் வரையறுக்கப்பட்ட நீளத்தைவிடச் சிறியதாயினும் கூட வரையறுக்கப்பட்ட முழு இடத்தையும் எடுத்துக்கொள்ளும். varchar fieldல் சேமிக்கப்பட்ட தகவல், அதன் நீளத்திற்கு உண்டான இடத்தை மட்டுமே...

posted @ Thursday, May 24, 2007 1:36 AM | Feedback (3) | Filed Under [ தகவல் தளம் ]

Powered by: