புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

October 2006 Entries

WMI வழியாக விண்டோஸ் சர்வீசை நீக்க...

installutil.exeயை வைத்துக்கொண்டு விண்டோஸ் சர்வீசை நிறுவுவதும் நீக்குவதும் மிகவும் சுலபம். ஆனால் ஒரு பொதியாக (package) மாற்றியபின் விண்டோஸ் சர்வீசை நிறுவியதும் கணிணியுடன் அப்படியே ஈஷிக்கொண்டு நிற்கும். பொதியை நீக்கினாலும் சர்வீஸ் பட்டியலில் இருந்து விண்டோஸ் சர்வீஸ் நீங்காது. இதனால் என்ன ப்ரச்சனை என்றால் மீண்டும் அதே பொதியை நிறுவமுடியாது. ஏற்கனவே இந்த பெயரில் ஒரு விண்டோஸ் சர்வீஸ் பட்டியலில் இருப்பதால், மீண்டும் நிறுவ முடியாது... installutil வைத்துக்கொண்டு கூட. இப்படி பட்டியலில் தங்கிவிட்ட விண்டோஸ் சர்வீசின் பெயரை, சர்வீஸ் முகமையில் (Services console) இருந்தே வலதுபக்க க்ளிக் பண்ணி எல்லாம் நீக்க முடியாது. அஞ்சா நெஞ்சராக இருப்பவர்கள் ரெஜிஸ்ட்ரியில் கைவைத்து இதை நீக்கலாம். வேறு எப்படியாவது ஒரு வழியில் இந்த பெயரை நீக்கினால்தான் மீண்டும் விண்டோஸ் சர்வீசை நிறுவமுடியும். விண்டோஸ் மேனேஜ்மெண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் (WMI) வழியாக இதை நீக்கலாம். WMI என்பது விண்டோஸ் கணிணியில் இருக்கும் சர்வீஸ், ப்ராசஸ், பிணைய பகிர்வுகள் (network share)...

posted @ Saturday, October 28, 2006 8:12 PM | Feedback (4) | Filed Under [ கட்டுமானம் ]

Powered by: