புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

எஸ்.க்யூ.எல். சர்வர் ஒருமைப் பயனர் நிலை

டேட்டாபேசுடன் தனிமையில் ஆர அமர உட்கார்ந்து பேசவோ, ஒரேயடியாக அழிக்கவோ முயல நினைத்தால், சில நேரங்களில் இயலாமல் போகலாம். உதாரணத்திற்கு,

DROP DATABAES <dbname>

என்ற வினவலுக்கு

Cannot drop the database <dbname> because it is currently in use
.

என்ற பிழைச்செய்தி வரலாம்.

இப்படிப்பட்ட நேரங்களில் நாம் எண்ணியதை முடிக்க ஒரே வழி, தகவல் தளக்கோப்புக்கும் வெளி உலகுக்குமான தொடர்பை ஒட்டுமொத்தமாகத் துண்டிப்பதுதான்.

ALTER DATABASE <dbname> SET SINGLE_USER

என்று வினவல் இதற்கு பயன்படும். அந்த கணத்தில் தொடர்பில் இருக்கும் பயனர்கள் தத்தமது நிலுவையில் இருக்கும் செயல்களை முடித்துக்கொண்ட பிறகு, <dbname> என்ற பெயருடைய டேட்டாபேஸ் ஒருமைப் பயனர் நிலைக்கு வந்துவிடும். ஒரு வலைத்தளம் அல்லது பலர் பயன்படுத்தும் மென்பொருளுக்கான தகவல்தளத்திற்கு இந்த வினவலே சரியாக இருக்கும்.

என்ன ஆனாலும் சரி, டேட்டாபேசை அழித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்துவிட்டால்,

ALTER DATABASE <dbname> SET SINGLE_USER WITH ROLLBACK immediate

என்று வினவினால் போதும். அந்த நொடியே எல்லா பயனருடைய தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு drop database <dbname> என்று கொடுத்துக்கொள்ளலாம்.

சில நேரங்களில் விட்டுப்பிடிக்க வேண்டிய நிலை வரலாம். 'இந்தாப்பா, இவ்வளவு நேரம் தரேன். அதுக்குள்ள மேட்டர முடிச்சுட்டு எடத்த காலி பண்ணு' என்று சொல்ல நினைத்தால்

ALTER DATABASE <dbname> SET SINGLE_USER WITH ROLLBACK AFTER 300

என்று கொடுக்கலாம். AFTER என்ற சொல்லுக்குப் பிறகு வரும் எண், மணித்துளிகளைக் குறிக்கும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்படும். alter database வினவலைக் கொடுத்தவரின் கட்டுப்பாட்டுக்குள் தகவல்தளக்கோப்பு வந்துவிடும்.

திரும்பவும் multi user நிலைக்கு மாற்றுவதும் எளிமையானதுதான்.

ALTER DATABASE <dbname> SET MULTI_USER என்று கொடுத்தால் திரும்பவும் பன்மைப் பயனர் நிலைக்கு வந்துவிடும்.

Print | posted on Friday, July 14, 2006 1:32 PM | Filed Under [ தகவல் தளம் ]

Feedback

Gravatar

# re: எஸ்.க்யூ.எல். சர்வர் ஒருமைப் பயனர் நிலை

டியர் கிருபா ஷங்கர்,
சப்டெக்ஸ்ட் ஒப்பன் சோர்ஸ் ப்ரொஜாக்ட்டுக்காக லிங்க் குடுத்துள்ளீர்களே, நீங்களும் அதில் மெம்பரா, தகவல் தெரிவிங்கள்.
7/14/2006 6:04 PM | Balachandar Ganesan
Gravatar

# re: எஸ்.க்யூ.எல். சர்வர் ஒருமைப் பயனர் நிலை

இன்னும் மெம்பரா ஆகலைங்க பாலச்சந்தர் சப்டெக்ஸ்ட்ல, ஆனா இந்த வலைப்பூ சப்டெக்ஸ்ட் கொண்டுதான் இயங்குகிறது. அவ்வளவுதான்.

Post Comment

Title  
Name  
Email
Url
Comment   
Please add 8 and 6 and type the answer here:

Powered by: