புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

எஸ்.க்யூ.எல். சர்வர் தொடங்க மறுக்கிறதா?

இன்று காலை நான் பணியகம் வந்ததும் ஒரு மென்பொருள் இயங்க மறுத்து சண்டித்தனம் செய்தது. மென்பொருளின் log file பார்த்ததும் SQL Server ப்ரச்சனை என்று புரிந்தது.

கடைசியில் பார்த்தால், அட ஆமாம். SQL Server அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. Administrative Tools->Services சென்று start பண்ணினால்

The MSSQLSERVER service on Local Computer started and then stopped. Som eservices stop automatically if they have no work to do, for example, the Performance Logs and Alerts service.

என்று ஒரே ஒரு தகவல்பெட்டி மட்டும் காண்பித்துவிட்டு மடக்கென்று படுத்துவிட்டது.

அப்புறமென்ன, Event Log தான் ஒரே வழி. நேரே Event viewer->Applicationக்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்க்கும்படியான நிலமை. அங்கே ஒரு விஷயம் கிடைத்தது. ஒரு error log.


17204 :
FCB::Open failed: Could not open device C:\Program Files\Microsoft SQL Server\MSSQL\Data\<dbname>_Log.LDF for virtual device number (VDN) 2.

இந்த பிழைச்செய்தி master databaseக்கு வந்தால் SQL Server start ஆகாது. ஆனால் <dbname>ஓ ஒரு சாதாரண மென்பொருளுக்கான கோப்பு. சரி என்று கொஞ்சம் googleஐ நாடி சிலப்பல காரியங்களைச் செய்து பார்த்தும் ஒன்றும் கதைக்கே ஆகவில்லை. mdf file read-only ஆட்ரிப்யூட்டில் இல்லை. ldfஉம் சரியாகத்தான் இருக்கிறது. வேறு எந்த மென்பொருளும் இந்த கோப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை.

கடைசியாக ஒரு யோசனை தோன்றியது. command prompt திறந்து, SQL Server நிறுவிய அடைவு(directory)க்குள் சென்று, binn\sqlservr.exe கோப்பை அழைத்தேன். SQL Server Windows Serviceக்கான இயங்குக்கோப்பு இது. பிறகு விடை கிடைத்தது:

SQL Server evaluation period has expired.

என்ற செய்தியைக் காண்பித்துவிட்டு இயக்கத்தை முடித்துக்கொண்டுவிட்டது sqlservr.exe.

ஆக, ப்ரச்சனை டேட்டாபேஸ் கோப்பு இல்லை.

என் கணினியில் testing team நண்பர் ஒருவர் தேதியைப் பல வருடங்கள் மாற்றி வைத்து நேற்று ஒரு மென்பொருளைச் சோதனை செய்து கொண்டிருந்தார். இன்று காலை கணிப்பொறி இயக்கப்பட்டவுடன், பழைய தேதியைப் பார்த்து SQL Server தொடங்க மறுத்துவிட்டது. பிறகு சரியான தேதிக்கு system clock-ஐ மாற்றி வைத்ததும், சமர்த்தாக SQL Serverஉம் இயங்க ஆரம்பித்துவிட்டது. ஒழுங்காக MSDEயையும் நிறுவிக்கொள்ள வேண்டும்.

Print | posted on Wednesday, July 12, 2006 3:44 PM | Filed Under [ தகவல் தளம் ]

Feedback

No comments posted yet.

Post Comment

Title  
Name  
Email
Url
Comment   
Please add 2 and 8 and type the answer here:

Powered by: