புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

கர்சர்

ஒவ்வொரு ப்ரச்சனைக்கும் பல வழிகளில் தீர்வு காணலாம். சிலவை மிகச்சில நிரல்வரிகளே கொண்டிருக்கும். சில பேர் எழுதும் நிரல்களில் தேவையின்றி நிறைய நிரல்வரிகள் இருக்கும்.

உதாரணமாக, கீழ்க்கண்ட நிரல்வரிகளை Query Analyzerல போட்டு F5 விசையை அழுத்தி Messages சாளரத்தில் பாருங்கள்.

use master
declare @DbName varchar(1000)
declare @DbFileName varchar(1000)
declare cursormasters cursor for select name,filename from Sysdatabases
open cursormasters
fetch next from cursormasters into @DbName,@DbFileName
while @@fetch_status=0
begin
if
(not @DbName='master')
begin
print 'Deleting database file ''' + @DbFileName + '.MDF''.'
print 'Deleting database file ''' + replace(@DbFileName,'.MDF','_LOG.LDF') + '''.'
end
else
print
'Could not delete master database...'
fetch next from cursormasters into @DbName,@DbFileName
end
close cursormasters
deallocate cursormasters

ஒன்றும் அதிர்ச்சியடையவில்லை தானே? இதே outputஐ வரவழைக்க வேறு சில சுலபமான வழிகளும் இருக்கிறதுதான்.

ஆனால், இரண்டு print statement கொடுப்பதற்குப் பதிலாக ஒரே ஒரு வரியிலேயே அந்த output வரவழைக்கலாமாமே? அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இதைப் படித்த யாருக்காவது அது எப்படி என்று தெரிந்தால், கொஞ்சம் முயன்று பார்த்து சொல்லுங்களேன்.  எல்லாம் வெற்றிகரமாக முடிவடைந்தால் screenshotஐ எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? ;-)

க்ருபா

Print | posted on Thursday, July 06, 2006 5:26 PM | Filed Under [ தகவல் தளம் ]

Feedback

Gravatar

# re: கர்சர்

எனக்கு இதைப்பற்றி அவ்வளவு தெரியாவிட்டாலும்,
ஒரு புதியவர் பார்த்தால் காட்டின் உள்ளே இருந்து வெளியே வர தினருவது வது போல உணர்வு வருகிறது.
3 பதிவுகள் மாத்திரம் தான் உள்ளதா?
நான் தேட மறந்துவிட்டேனா?
பின்னூடத்துக்கு தகுதியில்லாத பட்சத்தில் வெளியிடவேண்டாம்.
7/14/2006 7:03 PM | குமார்
Gravatar

# re: கர்சர்

ஆஆஆஆ!!!

குமார், "3 பதிவுகள் மாத்திரம் தான்" உள்ளதா என்று கேட்டு முடித்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது போல் இருக்கிறதே? இருக்கட்டும் இருக்கட்டும். பிறகு கவனித்துக்கொள்கிறேன்.

பின்னூட்டத்துக்குத் தகுதியா? அப்போ வலைப்பதியறதுக்கு எவ்வளவு தகுதி வேணும்? அதையெல்லாம் பார்த்தா அப்பறம் நான் வலைப்பதிய முடியுமா? ;-)

Post Comment

Title  
Name  
Email
Url
Comment   
Please add 7 and 5 and type the answer here:

Powered by: